Amman Devotional Song Lyrics
அம்மன் பாடல் வரிகள்
Movie - Padai Veetu Amman (2002)
Singer - Swarnalatha
மாயி மகமாயி
மணிமந்திர சேகரியே
ஆயி உமையானவளே
ஆதி சிவன் தேவியரே
சமைத்தால் சமயபுரம்
சாதித்தால் கண்ணபுரம்
அந்த கண்ணபுரத்து
எல்லைய விட்டு என் அம்மா
நீ கடுகு வர வேணுமடி
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி
அஞ்சு குடைக்காரி
தஞ்சாவூரு மாரி
தஞ்சம் என வந்தோரை
காத்து நிக்கும் தேவி
பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி
வெள்ளிமலை நாயகி
வேலனுக்கு தாயடி
வேம்பு ரதம் ஏறி வந்து
வினையை தீர்க்கனும்
நாராயணன் தங்கச்சி
நல்லமுத்து மாரியே
தங்க ரதம் ஏறி வந்து
தாயை காக்கணும்
என் பம்பை சத்தம்
கேட்கலையோ கருமாரியே
இந்த பானகமும்
ருசிக்கலையோ பூமாரியே
என் மாளிகையின்
மணிக்கதவும் திறக்கவில்லையோ
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி
வேம்பினிலே உடையடி
வைகையாறு கடையடி
சாம்பிராணி வாசத்தோடு
சங்கரி வாரனும்
அஞ்சு தலை நாகினி
ஆயிரம் கண் நாயகி
முண்டக்கண்ணி மோகினி
வந்து முத்து எடுக்கனும்
ஆதி மீனாட்சி தாயே
நீ பெண் இல்லையா
இங்கே பாலன் படும்பாட்டை
பார்க்க கண்ணில்லையா
உன் பாளையத்து ஆலயத்தில்
பாசம் இல்லையா
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி
அஞ்சு குடைக்காரி
தஞ்சாவூரு மாரி
தஞ்சம் என வந்தோரை
காத்து நிக்கும் தேவி
பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி
~~~*~~~
0 comments:
Post a Comment