பாடியவர் - கமலா பழனியப்பன்
Singer - Kamala Palaniappan
சுட்ட திருநீறெடுத்துத் தொட்டக் கையில் வேலெடுத்துத்
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் ... சுந்தரம் ... சுந்தரம்!
அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்.
ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே ... நெஞ்சமே ... நெஞ்சமே!
அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.
கந்தனது வேலெடுத்துக் காவடிகள் தோளெடுத்துக்
கால் நடையாய் வந்துசேரும் கூட்டமே ... கூட்டமே ... கூட்டமே!
அந்தத் தோளெடுத்துக் காவடிகள் தோகைமயில் வாஹனனை
சேவடிகள் தேடிவரும் நாட்டமே.
பக்கமிரு மாதிருக்கச் சொக்கத்தங்க வேலெடுத்துப்
பச்சைமயில் உச்சிவரும் வேலனே ... வேலனே ... வேலனே!
உந்தன் பஞ்சடியை நெஞ்சிருத்திப் பால்குடத்தைத் தோளெடுத்தால்
அஞ்சி மிகக் கெஞ்சிடுவான் காலனே காலனே காலனே!
மாது குறவள்ளியுடன் வண்ணமயில் ஏறிவரும்
நீதிபதி ஆனவனே சண்முகம் ... சண்முகம் ... சண்முகம்!
அந்த நீதியிலே நானும் ஒரு பாதி எனச்சேர்ந்திருக்கும்
சேதி சொல்ல வேணுமய்யா சண்முகம் ... சண்முகம் ... சண்முகம்!
~♤~♤~♤~♤~♤~♤~
0 comments:
Post a Comment