Tamil Devotional Song Lyrics - Navaratri Song Lyrics
Singer - Mahanadhi Sohobana
உலகின் தாயே ஸ்ரீலக்ஷ்மி
உணர்வில் வாழும் ஸ்ரீலக்ஷ்மி
நிலவின் வடிவே ஸ்ரீலக்ஷ்மி
நிம்மதி அருளும் ஸ்ரீலக்ஷ்மி
தேவிலக்ஷ்மியே மலர்மகளே
செல்வம் பொழியும் திருமகளே
பூவினில் அமர்வாய் வருவாயே
பொன்னும் பொருளும் தருவாயே
அச்சம் நீக்கிட்ரும் ஸ்ரீலக்ஷ்மி
அமைதி தந்திடும் ஸ்ரீலக்ஷ்மி
ஆதி ரூபமே ஸ்ரீலக்ஷ்மி
அபயகைகளே ஸ்ரீலக்ஷ்மி
ஆதிலக்ஷ்மியே திருமகளே
அபயம் தந்திடும் பொன்மகளே
வேதவானிலே அலைமகளே
வேண்டும்வரமருள் பூமகளே
அறமிராண்டினால் ஸ்ரீலக்ஷ்மி
கருணை தந்திடும் ஸ்ரீலக்ஷ்மி
வரத தேவியே ஸ்ரீலக்ஷ்மி
வாழ்வு தந்திடும் ஸ்ரீலக்ஷ்மி
தேவிலக்ஷ்மியே மலர்மகளே
செல்வம் பொழியும் திருமகளே
பூவினில் அமர்வாய் வருவாயே
பொன்னும் பொருளும் தருவாயே
செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி
சிந்தைமலரும் ஸ்ரீலக்ஷ்மி
செல்வக்குவையே ஸ்ரீலக்ஷ்மி
சேவடியழகே ஸ்ரீலக்ஷ்மி
ஆதிலக்ஷ்மியே திருமகளே
அபயம் தந்திடும் பொன்மகளே
வேதவானிலே அலைமகளே
வேண்டும்வரமருள் பூமகளே
மலரில் மின்னும் ஸ்ரீலக்ஷ்மி
மங்களம் அருளும் ஸ்ரீலக்ஷ்மி
கலைகள் அருளும் ஸ்ரீலக்ஷ்மி
கால ஆதியே ஸ்ரீலக்ஷ்மி
தேவிலக்ஷ்மியே மலர்மகளே
செல்வம் பொழியும் திருமகளே
பூவினில் அமர்வாய் வருவாயே
பொன்னும் பொருளும் தருவாயே
பொன்னும் மணியும் ஸ்ரீலக்ஷ்மி
பூணும் அழகே ஸ்ரீலக்ஷ்மி
மின்னும் மகுடம் ஸ்ரீலக்ஷ்மி
சூடியத் திருவே ஸ்ரீலக்ஷ்மி
ஆதிலக்ஷ்மியே திருமகளே
அபயம் தந்திடும் பொன்மகளே
வேதவானிலே அலைமகளே
வேண்டும்வரமருள் பூமகளே
தேவிகள் வாழ்த்தும் ஸ்ரீலக்ஷ்மி
திவ்யரூபமே ஸ்ரீலக்ஷ்மி
தெற்கில் அமரும் ஸ்ரீலக்ஷ்மி
தீபச்சுடரே ஸ்ரீலக்ஷ்மி
தேவிலக்ஷ்மியே மலர்மகளே
செல்வம் பொழியும் திருமகளே
பூவினில் அமர்வாய் வருவாயே
பொன்னும் பொருளும் தருவாயே
சௌந்தர்யமே ஸ்ரீலக்ஷ்மி
சுந்தரவடியே ஸ்ரீலக்ஷ்மி
மந்திர முகமே ஸ்ரீலக்ஷ்மி
மாமலர் சூடும் ஸ்ரீலக்ஷ்மி
ஆதிலக்ஷ்மியே திருமகளே
அபயம் தந்திடும் பொன்மகளே
வேதவானிலே அலைமகளே
வேண்டும்வரமருள் பூமகளே
முதலாய்த் தோன்றிய ஸ்ரீலக்ஷ்மி
முதலாய் மலரும் ஸ்ரீலக்ஷ்மி
எதிலும் நீயே ஸ்ரீலக்ஷ்மி
எங்கள் துணையே ஸ்ரீலக்ஷ்மி
தேவிலக்ஷ்மியே மலர்மகளே
செல்வம் பொழியும் திருமகளே
பூவினில் அமர்வாய் வருவாயே
பொன்னும் பொருளும் தருவாயே
ஆதிலக்ஷ்மியே திருமகளே
அபயம் தந்திடும் பொன்மகளே
வேதவானிலே அலைமகளே
வேண்டும்வரமருள் பூமகளே
~~~*~~~
0 comments:
Post a Comment