தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி - Thedivarum Kannukalil Lyrics

Swami Ayyappan Devotional Dongs Lyrics

Film : Swami Ayyappan (1975)

Singer - Ambili

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்

காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்

காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே

அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல்

அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே

ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி

தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே

ஒரு தம்பி மட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே

தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே

ஒரு தம்பி மட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே

அன்புகொண்டு த‌ந்தைக்கவன் செய்யும் பணியிலே – நாங்கள்

ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே

ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி

~~~*~~~*~~~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ayyappan Devotional Songs Lyrics

Ayyappa Songs By K.J.Yesudas

Murugan Tamil Songs by TMS