அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ - Adithaalum Nee Anaithaalum Nee Lyrics

அடித்தாலும் நீ  அணைத்தாலும் நீ

Murugan Devotional Song Lyrics

Singer - K.B.Sundarambal


அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ - என்னை

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ - உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ - என்னை

அணைத்தாலும் நீ


கடுக்க நிற்கும் ஏழை - கால்

கடுக்க நிற்கும் ஏழை - சன்னிதியில் கால்

கடுக்க நிற்கும் ஏழை - முருகா! 

உன் சன்னிதியில் கால் 

கடுக்க நிற்கும் இந்த ஏழை

கடுக்க நிற்கும் ஏழை - என்

இடுக்கண் கலையாமல்

கடுக்க நிற்கும் ஏழை - என்

இடுக்கண் கலையாமல்

படுத்தாத பாடல்லாம் 

படுத்துகிறாய் ஐயா!


அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ...


தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் -நின்பாதம் 

அடுத்தேன் தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் நின்பாதம் அடுத்தேன் - என்னைத் 

தடுத்தே ஆட்கொள்ளாமல் - முருகா! - 

என்னைத் தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் - என்னைத்

தடுத்தே ஆட்கொள்ளாமல் - தரணியில் எனைத் தனியே

விடுத்தால் இனி என்செய்வேன் 

வேதனை இனி தாளேன் 

தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் எனைத் தனியே விடுத்தால் என்செய்வேன் வேதனை இனி தாளேன்


அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ - உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ - என்னை

அணைத்தாலும் நீ 


~~~*~~~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.

Ganesh Songs Hindi