சரவணபவனே - முருகன் பாடல்வரிகள் - Saravanabhavane Lyrics in Tamil
சரவணபவனே - முருகன் பாடல்

Singer - Kalpana

சரவணபவனே சண்முக வடிவே

சரணடைந்தோமே வேல் முருகா

கரங்கள் குவித்து உன்னடி பணிய

காத்திடுவாயே வேல் முருகாநிரந்தரமான உனதருள் வேண்டி

நினைப்போம் உன்னை வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா


நறுமலர் எடுத்து சரமாய் தொடுத்து

நான் உனக்களிப்பேன் வேல் முருகா

தருணம் இதுவென தந்திடுவாய் அருள்

தாமதம் ஏனோ வேல் முருகா


கருணை புரியும் கந்தா என் மேல்

கடைக்கண் வைப்பாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

பழனி மலையில் நின்றருள் செய்யும்

பாலகன் நீயே வேல் முருகா

பஞ்சாமிர்தமாய் இனிப்பவன் நீயே

பக்தருக்கென்றும் வேல் முருகா


கோவண ஆண்டி கோலத்தில் இருக்கும்

குழந்தையும் நீயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா


தண்டம் ஏந்தி தண்ணருள் செய்யும்

தண்டாயுதனே வேல் முருகா

அன்பரின் துயரை ஆற்றிட வருவாய்

அழகா எங்கள் வேல் முருகாசிந்தனை முழுதும் உன் வசமாக

செய்திட வருவாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா


சுவாமி மலையில் வாழும் எங்கள்

சுந்தர வடிவே வேல் முருகா

பிரணவம் என்பதன் பொருளைச் சொன்னாய்

பெரியவன் நீயே வேல் முருகா


குருவாய் தரிசனம் கொடுக்கும் எங்கள்

குமரா வருவாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாசோதனை யாவும் கலைந்தருள் செய்யும்

சுப்ரமணியனே வேல் முருகா

காத்தலினாலே நான் உனைப் பாடி

கை தொழுவேனே வேல் முருகாமாதவன் மகுகா மயில் வாகனனே

மலர்பதம் தருவாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

பாலினில் குளிக்கும் பாலகம் நீயே

பதமலர் தருவாய் வேல் முருகா

நாளைய பொழுதை நலமுடன் செய்யும்

நாயகன் நீயே வேல் முருகா

 

சூலம் தாங்கிய உமையவள் மைந்தா

சுந்தர மூர்த்தி வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாதேனில் குளிக்கும் தெய்வம் நீயே

தீவினை அகற்றும் வேல் முருகா

வானவர் வந்து வணங்கிடும் ஆற்றல்

கொண்டவன் நீயே வேல் முருகா


கானக மயிலாள் வள்ளியை மணந்த

கந்தர்வ ரூபா வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

தண்ணொளி சிந்தும் உன்னெழில் முகத்தை

கண்டிட வந்தோம் வேல் முருகா

நன்மைகள் செய்யும் உன் பதம் நாடி

நாங்கள் வருவோம் வேல் முருகா

 

துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே

துணையிருப்பாயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

திருப்பரங்குன்றம் தளமதில் வாழும்

திருவுடையோனே வேல் முருகா

திருமணக் கோலம் கொண்டிருப்பவனே

தினம் உன்னை துதிப்போம் வேல் முருகாஇருபுறம் தேவி எழிலுடன் இருக்க

எங்களைக் காப்பாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

திருச்செந்தூரில் இருப்பவன் நீயே

செந்தில்நாதா வேல் முருகா

நினைத்ததை எல்லாம் முடித்திட அருள்வாய்

நெஞ்சினில் வாழும் வேல் முருகா


அடுத்தவர் தம்மை அழித்திட எண்ணும்

அகந்தையை அழிப்பாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாபொறுமையின் உருவே புண்ணிய பாலா

உன்னடி பணிந்தோம் வேல் முருகா

திருவுளம் கனிந்து தீமையை அழித்து

தினம் என்னை காப்பாய் வேல் முருகாதருமம் மிகுந்த சென்னையில்

கந்தகோட்டத்தில் வாழும் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

 

செவ்வாய் தோஷம் கண்டவர் உன்னை

நினைத்தால் போதும் வேல் முருகா

பொல்லாத் துயரம் பொடிப்பொடியாகும்

பொங்கிடும் இன்பம் வேல் முருகா

 

எல்லா பிணியும் தீர்ப்பவன் நீயே

என்னை ஆளும் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

கிருத்திகை சஷ்டி செவ்வாய் நாளில்

விரதம் இருப்போம் வேல் முருகா

உருத்தெரியாமல் வாட்டும் இன்னல்

உன்னால் விலகும் வேல் முருகாகருத்துடன் உன்னை மனதினில் வைத்தால்

கைமேல் பலன் தரும் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

சிவனுடன் சக்தி கணபதி மூவரும்

உன்னருள் செய்தார் வேல் முருகா

வாங்கிட வருவோர் வாழ்வினில் தோஷம்

விலகிடச் செய்வாய் வேல் முருகாஉனக்கருள் நிகராய் வேறொரு தெய்வம்

உலகினில் உண்டோ வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாசஷ்டி கவசம் சொல்லிடும் அன்பர்

சங்கடம் தீர்ப்பாய் வேல் முருகா

பக்தியில் உன்னை துதிப்பவர்க்கெல்லாம்

பலன் தரும் தேவா வேல் முருகாவெற்றியைத் தருவாய் வீரம் தருவாய்

விதி வழி போகும் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாசெல்வம் அறிவு ஞானம் யாவும்

சேர்க்கும் எங்கள் வேல் முருகா

கள்ளம் இல்லா உள்ளம் தருவாய்

கந்தா கடம்பா வேல் முருகாநல்வழி நாளும் சென்றிட வேண்டும்

நலமருள்வாயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாகுடல் நோய் கண்ட தவமுனி உன்னை

பணிந்தார் அன்று வேல் முருகா

செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று

குணமடைத்தாரே வேல் முருகாபன்னீர் இலையில் தருவதனாலே

பிணிகள் தீர்த்து வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாபேசாதிருந்த குமரகுருபரரை

பேசிட வைத்தாய் வேல் முருகா

கலிவெண்பாவால் உந்தனைப் பாட

கருணை செய்தாயே வேல் முருகாஎளியவர்க்கெல்லாம் ஏற்றம் தரவே

எங்கும் நிறைந்தாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகாதீராப்பிணியால் பகழிக் கூத்தர்

துடித்ததை அறிவாய் வேல் முருகா

நேராய் அவர் முன் பிள்ளைத் தமிழை

பாடிடச் சொன்னாய் வேல் முருகாஅவரும் பாடிட அகன்றது பிணியே

அதிசயம் புரிந்தாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

பகவத்பாதாள் சங்கரர் ஒருமுறை

காசநோய் கண்டாய் வேல் முருகா

செந்தூர் சென்றால் நலம்பெறலாமென

சிவனார் சொன்னார் வேல் முருகாசுப்ரமணியனின் புஜங்கம் பாடிட

குணமடைந்தாரே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

 

பிறவித் துன்பம் தீர்ப்பவன் நீயே

பேரருள் செய்வாய் வேல் முருகா

அருவியைப் போலே அருள்மழை சிந்தும்

அழகுடையோனே வேல் முருகா

 

நெறியுடன் வாழ நீயருள் செய்வாய்

நின் பதம் சரணம் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

கோரிக்கை ஏற்கும் குமரனும் நீயே

கும்பிடுவோமே வேல் முருகா

தோளினில் சுமக்கும் குழந்தையைப் போலே

எளியவன் ஆனாய் வேல் முருகா

 

வேண்டிடும் அடியார் வேதனை தீர்க்கும்

வேந்தனும் நீயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

முருகு என்றால் அழகு இளமை

நறுமணமன்றோ வேல் முருகா

தேடும் கடவுள் தன்மையும் கூட

முருகன் தானே வேல் முருகா

 

மாறா இளமை குன்றா அழகும்

கொண்டவன் நீயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

பகைவர் தம்மை அழிப்பதனாலே

கந்தன் ஆனாய் வேல் முருகா

உயிர்கள் மனப்பிணி போக்குவதாலே

குமரன் ஆனாய் வேல் முருகா

 

நெஞ்சக் குகையில் இருப்பதனாலே

குகனாய் ஆனாய் வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

நாணற் காட்டில் தோன்றியதாலே

தவனன் ஆனாய் வேல் முருகா

ஞான பண்டிதன் என்றுனைப் போற்ற

நல்வரம் தருவாய் வேல் முருகா

 

முதன்மைப் பொருளாய் இருப்பவன் நீயே

சுப்ரமணியனே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

 

கலைகளில் சிறக்கும் ஆற்றலைத் தருவாய்

கதிரொளி சிந்தும் வேல் முருகா

ஞானம் வீரம் தந்திடும் உன்னை

நாளும் பணிவோம் வேல் முருகா


பகைமை தன்னை துரத்தும் ஆற்றலை

தருபவன் நீயே வேல் முருகா

பரமன் மகனே பன்னிரு கரனே

பணிந்தோம் உன்னை வேல் முருகா

~~*~~*~~*~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Banglore remain nammal murugan songs lyrics

    ReplyDelete

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.