ஓம் சரவண பவ ஷண்முக குகா அறுபடை உடை முருகா -Om Saravana Bhava Shanmuga Guga Lyrics in Tamil

Om Saravana Bhava Shanmuga Guga Arupadai Udai Muruga Lyrics

Singers - Silambarasan TR, Nivas K Prasanna

High Energy Beat Devotional Song

ஆறுமுக வேலனே
ஆடும் மயில் அழகனே
ஞான குரு பாலனே
ஞான குரு பாலனே
பழனி மலை முருகனே
முருகா முருகா.. முருகா..

ஆட்றா..
ஹே ஹே
ஹே ஹே

ஓம் சரவண பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
சரவணா பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

கவலைகள் சிதறி பதறி
ஓட வேண்டும் முருகா
வழிகளை சிதறி உதறி
எரிய வேண்டும் முருகா
பயங்களும் அலறி கதறி
விலக வேண்டும் முருகா
பலமுடன் குமுறி திமிறி
நிமிர வேண்டும் முருகா

சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா

சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

ஹே சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

ஹே அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

என்னுடைய கருணை விழிகள்
கள்ளங்கள் துடைக்க மனங்கள் தெளிய
ஆறு படை முருகனின்
காவடிகள் கால் கடுக்க
கல் கடந்த காலடிகள்
வெற்றி வேல் வீர வேல்
ஞான வேல் மாய வேல்
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்
தமிழ் கடவுளாய் முருகன் இருக்க
துயரம் தடைகள் தெறிக்க
சங்கு ஒளியிலும் செங்குருதியும்
கடல் அலையிலும் விண்வெளியிலும்
என் முருகனின் அருள் பொழிந்திடும்
மன களத்தினில் கலியுகம் எனில்
ஒரு மனம் என கலை கவியுடன்
களம் இறங்கிட மதி தெளிந்திடும்
அரண் மகன் ஆறுமுகன்
மனோகரன் கார்த்திகேயன்
தண்டபாணி கடம்பன்

கந்தன் குமரன் சேனாபதி
செந்தில் சித்தன் நீயே கதி

விடுகதை போக்கவா
விடுதலை ஆக்கவா
விதி வழி போகும் வாழ்வை
மதியோடு மாற்றவா
முருகா

எது வரும் போதிலும்
துணிவுடன் மோதவா
துணை நீ நிற்கும் போது
துயர் நீங்கும் அல்லவா

மனம் அதிருது உடல் அதிருது
புயல் என சுழன்றாடவே
புதிரா அவிழுது புது உணர்விது
புது உலகினை காணவே
தடை உடை இது தடம் தெரியுது
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே
தெளிவடையுது திசை தெரியுது
விறு விறுவென ஏறவே

முருகா முருகா முருகா முருகா..
முருகா முருகா முருகா முருகா..
முருகா முருகா

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே
அந்த சிவனிடம் விடை வாங்கி
பழனி மலையை அடைந்த ஆண்டவா
ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா

உனதடி உருகி மருகி
வேண்டி நின்றேன் முருகா
முருகா
உன் பெயர் உலகம் முழுதும்
எடுத்து சொல்வேன் முருகா
முருகா
உனக்கென இரவும் பகலும்
நடந்து வந்தேன் முருகா
பலவித துயரம் சுமந்து
உடைத்து வந்தேன் முருகா

நல் வழியினை நீ வழங்கிடு
என் நிழலென நீ இருந்திடு
எங்கும் எதிலும் நீதானே
பொங்கும் தமிழும் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா

கந்தனுக்கு
அரோகரா
குமரனுக்கு
அரோகரா
வேலனுக்கு
அரோகரா
அழகனுக்கு
அரோகரா
மூத்த குடி முதல்வனுக்கு
தமிழ் குடியின் தலைவனுக்கு

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ayyappan Devotional Songs Lyrics

Telugu Devotional Songs Lyrics

K.J.Yesudas Ayyappan Devotional Songs Lyrics