நாதவிந்துக லாதீ நமோநம - Nadha Vindhu -Thiruvaavinakudi

Kantharaj Kabali
0
நாதவிந்துக லாதீ நமோநம





Singer - Sudha Raghunathan


நாதவிந்துக லாதீ நமோநம வேதமந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸ்வாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம கீதகிங்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீபமங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
ஈத லும்பல கோலாலபூஜையும் ஓதலுங்குண ஆசார நீதியும் ஈரமுங்குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழமண்டல மீதே மநோகர ராஜ கம்பீர நாடாளுநாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top