பொன்னான தெய்வமே எந்நாளும்
எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா
காத்திட வேணுமப்பா
நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும்
நாங்களும் தருவோமப்பா ஐயப்பா
நாங்களும் தருவோமப்பா
ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட
வரங்களும் தருவாயப்பா ஐயப்பா
வரங்களும் தருவாயப்பா
அனுதினமும் கற்பூரம் ஏற்றியே
சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா
சரணங்கள் சொல்வோமப்பா
குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு
கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா
கொஞ்சிடத் தோணுதப்பா.
சந்தனப் பொட்டிட்டு சதா உன் பக்கத்தில்
சாய்ந்திடத் தோணுதப்பா ஐயப்பா
சாய்ந்திடத் தோணுதப்பா
0 comments:
Post a Comment