துளசிமணி மாலை கட்டி இருமுடியைத் தலையில் ஏந்தி

Tulasi Mani Maalai Katti


( No Audio)

துளசிமணி மாலை கட்டி

இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப் 

போடு கன்னிச்சாமி - அங்கே 


சாஸ்தாவின் அருள் 

கிடைக்கும் கன்னிச்சாமி 

எரிமேலிப்  பேட்டையிலே 

கரிமலையில் நடக்கையிலே 


எத்தனையோ இன்பமுண்டு 

கன்னிச்சாமி - நீயும் 

வந்து பார்த்து வார்த்தைக் 

கேளு கன்னிச்சாமி


துளசிமணி மாலை கட்டி

இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப் 

போடு கன்னிச்சாமி


பாட்டுப்பாடி பஜனைப்பாடி 

பம்பாநதி தீர்த்தமாடி 

காட்டுக்குள்ளே குடியிருப்போம் 

கன்னிச்சாமி - அதிர் 


வேட்டு வச்சு 

வழிநடப்போம் கன்னிச்சாமி 

மலையதிரச் சரணம் போட்டு 

மனமுருகப் பாட்டும் கேட்டு 


அலையலையாய் நடந்து 

வந்தோம் கன்னிச்சாமி - அங்கே 

ஆனந்த தரிசனம் 

காண்போம் கன்னிச்சாமி


துளசிமணி மாலை கட்டி

இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப் 

போடு கன்னிச்சாமி


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ayyappan Devotional Songs Lyrics

Ayyappa Songs By K.J.Yesudas

Murugan Tamil Songs by TMS