நாத விந்துக லாதீ நமோநம

Murugan-thirupugazh


திருபுகழ் பாடல்

நாத விந்துக லாதீ நமோநம
 வேத மந்த்ரசொ ரூபா நமோநம

  ஞான பண்டித ஸாமீ நமோநம
 வெகுகோடி 

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம
 பரசூரர் 

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
     தீர சம்ப்ரம வீரா நமோநம
 கிரிராஜ 

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம
 அருள்தாராய் 

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு
 மறவாத 

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக
 வயலூரா 

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி
 லையிலேகி 

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
     ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்
 பெருமாளே








About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Saraswathi Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.

SPB Tamil Devotional Songs