பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்


 

Singer - Seerkazhi Govindarajan

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலும், 
அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்,
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு,
அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும்,
நீக்கி வைக்கும் பிள்ளையார் (x2)

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

மஞ்சளிலே செய்யினும்,
மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை,
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நமச்சிவாய என்ற
அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்,
பெருமை வாய்ந்தபிள்ளையார்

அவல் கடலை சுண்டலும்
அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார்
கண்ணை மூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தைகளைக்,
காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே 
இஷ்டம் போலச் சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Songs for Purattasi Sani or Tirumala Shanivara

.

10 Durga Bhajans & Devotional Songs

.