கோகுலத்து பசுக்கள் எல்லாம் - Gokulathil Pasukkal Ellaam Lyrics




கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு

நாலுபடி பால் கறக்குது இராமாரி
 அந்த மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி

அந்த மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி

இராமாரி அரே கிருஷ்ணாரிஅரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி....

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்

தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி......
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி

அவன் கனிஇதழில் பால் குடித்த
பூதகியைக் கொன்ற பின்தான்
அவன் கனிஇதழில் பால் குடித்து
பூதகியைக் கொன்ற பின்தான்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
இராமாரி அரே கிருஷ்ணாரிஅரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி.......

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி
சேலைதிருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
சேலை திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
இராமாரி அரே கிருஷ்ணாரிஅரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி.......

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

கோகுலத்து பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி அந்த

மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி
  
இராமாரி அரே கிருஷ்ணாரிஅரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி.....


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ayyappan Devotional Songs Lyrics

Ayyappa Songs By K.J.Yesudas

Murugan Tamil Songs by TMS