Guruvayoorappa Devotional Song Lyrics
கோயில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாவம் தீர குருவாயூரப்பா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு கிரிதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும் நந்த கோபாலனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் எண்ணெய் ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும் கண்ணா உந்தன் பாதம் நமஸ்காரம் செய்கின்றோம் குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் கொண்டை மயில் பீலிமின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு குழலூதும் கண்ணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் தெச்சி மந்தாரம் துளசி தாமரைப் பூமாலை சாற்றி அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு ஸ்ரீ வேலியை சுற்றிக்கொண்டு ஸ்ரீதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் தீரா வினை தீர்த்து வைத்து நான் கோரும்வரம் அளித்திடும் நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் கோயில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாவம் தீர குருவாயூரப்பா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்
