Ganesha Devotional Song Lyrics
குரலிசை : கீதா & லலிதா
Singers : Geetha & Lalitha
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
அன்போடு அழைத்தோம் அருகினில் வந்தே
அருளை தருவாய் சரணம் கணேஷா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
அப்பம் அவல் பொரி வெல்லம் அனைத்தும்
ஆசையோடு நாம் படைத்திடுவோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
அருகம்புல் மாலை அழகாய் தொடுத்து
அப்பனே உனக்கு சூட்டிடுவோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஆனந்தமாய் உன்னை பாடியழைத்தோம்
ஆட்கொண்டு எம்மை ஆதரிப்பாயே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
இசையால் இனிதாய் கூவியழைத்தோம்
இறைவா எம்மை ஆட்கொள்ளுவாய்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஈசனின் மைந்த எங்கள் விநாயகா
இருக்கைக் கூப்பி தொழுதே நின்றோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
உலகையாளும் உமையின் புதல்வா
உள்ளத்தில் மகிழ்வை தருவாயப்பா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
எங்கும் நிறைந்து இன்பத்தை தந்து
ஏற்றமளித்திடும் ஈசா மருகா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஏழு பிறவி யாமெடுத்தாலும்
இதயத்தில் உனையே ஏற்றிடும் வரம் தா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஐங்கரன் உன்னை அனுதினம் போற்றி
ஆனந்தம் பெறவே அருள் செய்குவாயே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஓமெனும் ப்ரணவ பொருளுரைத்து
ஓங்கார ரூபா ஓடி வருவாய்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
கருணைக் கடலே புத்தி விநாயகா
காலம் முழுதும் துதி செய்வோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
கும்பிட்டோர் குலம் விளங்க வைக்கும்
குருவானவனே ஆனை முகவா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
கூட்டமாய்க் கூடி பாடிப் பணிந்தோம்
நாட்டமாய் வந்து நலம் தருவாயே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
சங்கடம் தீர சங்கட ஹர
சதுர்த்தி விரதம் ஏற்றிடுவோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
மனையில் மங்களம் பொங்கிப் பெருக
மந்தார மலர் கொண்டு பூஜித்திடுவோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
வற்றா நிதியை பெற்றிட வந்திட
தொந்தி கணபதியை வணங்கிடுவோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
வந்தேன் என்று வாக்கினால் சொல்ல
தீவினை யாவும் எரிந்து ஒழியும்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
♪..♫..♪..♫..♪..♫..♪..♫
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
ஐந்து அக்னிகளிலே நின்று செய்த
தவப் பயனும் தட்டாமல் கிட்டும்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
வன்னியச் செடியை வணங்கி வழிபட
புண்ணிய நலன்கள் உடனே பெறலாம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
மோக்ஷமெனவே முக்தியுறவே
மோதகம் செய்து படைத்திடுவோமே
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
அஷ்டமா சித்தியும் இஷ்டமனைத்தும்
எளிதில் பெறவே உனைப் பணிந்தோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
கபிலர் வழிபட்ட கபில விநாயகா
காரணா உன்னை கணம் தொழுதோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
தத்துவம் கடந்த தத்துவ அறிவே
ஆனந்த உருவே உன்னடி பணிந்தோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
உயிருக்குயிராய் ஒளிரும் கணபதி
உலகநாயகா உன்னடி பணிந்தோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
மூவரும் தேவரும் ஏவரும் போற்றும்
தனிப்பெரும் தெய்வம் உன்னடி பணிந்தோம்
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
தர்மமாய் ஒளியாய் பெரிதாய் நின்ற
பெரும் பொருளே பணிந்தோமய்யா
ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கணேஷா
சித்தி விநாயகா ஸ்ரீ கணேஷா
~~~ * ~~~