Amman Devotional Song Lyrics
Singer- L.R.Eswari
ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்
அம்பிகையே உன் புகழை பாடி வருவோம்
ஆடியிலே பூசை வைத்து அடி பணிவோம்
ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்....
சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்...
வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம்
நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம்
நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம்
நல்ல நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்
வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம்
பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்...
~~~*~~~