Amman Devotional Song Lyrics
Singer - Anuradha Sriram
நாகம் திரிசூலம் உடன் கர்ஜனைத்து வரும் சிம்ஹம்
கொடு கொட்டி வில் கத்தி சிறு உடுக்கை பேசி வரும் நாதம்
ஊர்வச்சிரம் ருத்ராட்சம் திரு சங்கு உடன் பிறந்த சக்கரம்
மணி பிரம்பு சிறு கரும்பு நல் அங்குசத்துடன் பாசம்
கோடாரி கொடுசூரி என ஆயுதங்கள் உடன் தோன்றும்
நவச்சண்டி அவ ஏண்டி உன் பார்வை வீசு அது போதும்
மகமாயி ...
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
மாயி மகமாயி திரிஅரவு நாண் பூண்ட தேவி
கடுவீரி வேதாளி நீ வீறு கொண்ட நெடுங்காளி
மாந்தாரி அனல் மாறி நீ மந்திர மேரு மலைவாசி
கடை ஊழி உக்கிர காளி நீ உச்சிப்புளி மாட தாயி
ஸ்ரீ தாரா தீ ஜுவாலா அட நித்திய கல்யாண மாலா
ஸ்ரீ மாதா உருகாதா உன் ரூபம் ஒன்று வாராதா
மகமாயி ...
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
சண்டா சாமுண்டா அடி ஞான ஸ்கந்த குருமாதா
கண்டா குஷ்மாண்டா ஒளி ரூபமான சந்திரகண்டா
த்ரீநேத்ரீ காலராத்திரி நீ அசையும் ஸ்ரீசைல புத்திரி
மதுவந்தி மாதங்கி அடி பிரம்ம கபாலினி வஞ்சி
நவ துர்கா சுபத்ரா அடி அர்த்தனாரிஎனும் ருத்ரா
பிங்கலையே பொன்சிலையே நீ எழுந்து வர வேண்டும் மாரி
மகமாயி ...
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
காளி என்பதோ மாரி என்பதோ
நாமமாயிரம் கொண்டாயே
ரூபமாயிரம் கொண்டபோதிலும்
தாய்மை ஒன்றென வருவாயே
~~~*~~~