Murugan Bhajan Lyrics
ராகம் - சந்த்ர கெளன்ஸ்
ஆதிமூல முருகா முருகா முருகா
ஆதி தேவ முருகா
ஞான பாலா முருகா முருகா
ஞான தேவ முருகா
கோயில் நாடி வந்தேன் முருகா
குறைகள் தீர்க்க வருவாய்
உன் மலையை நாடி வந்தேன் முருகா
மனமிரங்கி வருவாய்
மயில் அழைக்க வந்தேன் முருகா
மனம் மகிழ்ந்து வருவாய்
உன்கொடி அழைக்க வந்தேன் முருகா
குணமறிந்து வருவாய்
வினைகள் நீங்க வந்தேன் முருகா
வேலெடுத்து வருவாய்
என் பவமழிக்க வந்தேன் முருகா
பதமளிக்க வருவாய்
அன்னை தந்தை ஆனாய் முருகா
அரிய செல்வம் ஆனாய்
என்னை ஆளும் முருகா முருகா
உன்னை என்றும் மறவேன்
நான் உன்னை என்றும் மறவேன்
உன்னை என்றும் மறவேன்
~~~ * ~~~