காவடியாம் காவடி கந்தவேலன் காவடி பாடல்வரிகள் - Kaavadiyaam Kaavadi Song Lyrics

Murugan Devotional Song Lyrics

Singer - L.R.Eswari


வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா


காவடியாம் காவடி கந்தவேலன் காவடி

பூவடியாம் பூவடி புகழ் முருகன் சேவடி


காவடியாம் காவடி கந்தவேலன் காவடி

பூவடியாம் பூவடி புகழ் முருகன் சேவடி


செந்தூருக்கும் காவடி திருத்தணிக்கும் காவடி

காந்தனுக்கும் காவடி கன்னித்தமிழ் பூவடி


பழனிமலை காவடி பக்தர்களின் காவடி

இளநிசேரும் காவடி இன்பநிலை கூறடி


பழனிமலை காவடி பக்தர்களின் காவடி

இளநிசேரும் காவடி இன்பநிலை கூறடி


ஏரகத்தில் காவடி இதயத்திலே காவடி

சீரகத்தில் சேவடி செந்தூரிலே பூவடி


ஏரகத்தில் காவடி இதயத்திலே காவடி

சீரகத்தில் சேவடி செந்தூரிலே பூவடி


சென்னிமலை காவடி செந்தமிழில் பாடடி

வண்ண வண்ண காவடி வடிவேலன் காவடி


சென்னிமலை காவடி செந்தமிழில் பாடடி

வண்ண வண்ண காவடி வடிவேலன் காவடி


ஆறுமுகன் காவடி ஆனந்தமே பாடடி

நீறுபூசி ஆடடி நிகரில்லா காவடி


ஆறுமுகன் காவடி ஆனந்தமே பாடடி

நீறுபூசி ஆடடி நிகரில்லா காவடி


தோள்களிலே காவடி தூய்மையான காவடி

பாலமுத காவடி பழனிவேலன் காவடி


தோள்களிலே காவடி தூய்மையான காவடி

பாலமுத காவடி பழனிவேலன் காவடி


சர்க்கரையில் காவடி சண்முகனின் காவடி

அக்கரையில் காவடி அக்கறையும் சேரடி


சர்க்கரையில் காவடி சண்முகனின் காவடி

அக்கரையில் காவடி அக்கறையும் சேரடி

~♤~♤~♤~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ayyappan Devotional Songs Lyrics

Telugu Devotional Songs Lyrics

K.J.Yesudas Ayyappan Devotional Songs Lyrics