கந்தன் காலடியை வணங்கினால் பாடல்வரிகள் - Kandhan Kaaladiyai Vananginal Lyrics


Murugan Devotional Song Lyrics

Singer - TM Soundararajan

Movie : Thiruvarul


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்


தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்

தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்

சிவசக்தி தானே வேலன்

அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் (x2)

மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (x2)


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே


உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி (x2)

அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு(x2)

கந்தன் காலடியை வணங்கினால்


ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே

அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்(x2)

கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான் (x2)

கந்தனிடம் செல்லுங்கள் 

என்ன வேண்டும் சொல்லுங்கள்

கந்தனிடம் செல்லுங்கள் 

என்ன வேண்டும் சொல்லுங்கள்

வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் (x2)


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன், கந்தன்

கந்தன் காலடியை வணங்குங்கள்

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.