அவிநாசி பத்து பாடல்வரிகள்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ..... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ..... பெருமாளே
அவிநாசிப் ..... பெருமாளே, அவிநாசிப் ..... பெருமாளே.
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 13
🌺 🌺 🌺 🌺 🌺 🌺
0 comments:
Post a Comment