திருமகளே உன்னை தேடி புகலடைந்தேன் பாடல்வரிகள்
தோடி இராகம் - ஆதி தாளம்
பல்லவி
திருமகளே உன்னை தேடி புகலடைந்தேன்
திரு உள்ளம் கனிந்து என்னை காப்பாயே
அநுபல்லவி
வறுமையை நீக்கி நல்ல வாழ்வளிப்பாய் என்று
பொறுமையுடன் உன்னை பூஜை செய்தேன் அம்மா
சரணம்
கடைக்கண்ணின் பார்வை ஒன்றை என் மீது வீசிவிட்டால்
விடை பெறுமே எந்தன் வினைகள் எல்லாம்
நடைபயின்றே என்னுடன் நீயும் வந்தால் ... உலகில்
தடையேதம்மா நலங்கள் தானாக தேடிவரும்
~*~*~*~~*~*~*~~*~*~*~
0 comments:
Post a Comment