Ayyappa Devotional Songs Tamil Lyrics
Singer - K.Veeramani
இதயம் என்றும் உனக்காக ஐயப்பா
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா
நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா
உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா
இதயம் என்றும் உனக்காக ஐயப்பா
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா
கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா .... ஐயப்பா
நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. ...ஐயப்பா
ஆரதமுதம் நீ பேரழகன் நீ
ஆரியங்காவில் வாழ்பவனும் நீ
இதயம் என்றும் உனக்காக ஐயப்பா
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா
அபயம் தந்திட சபரிமலை உண்டு ஐயப்பா
ஆறுதல் கூறிட உன் அருள் உண்டு ஐயப்பா
வேதமும் நாடும் வினைகளும் ஓடும்
எங்கள் நாவும் பாடும் ஞானமும் கூடும்
இதயம் என்றும் உனக்காக ஐயப்பா
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா
பண்ணமுதம் தந்தவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா
கண்ணழகு கொண்டவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா
விண்ணவரின் கண்மணியே சரணம் ஐயப்பா
எண்ணமதில் வந்திடுவாய் சரணம் ஐயப்பா
இதயம் என்றும் உனக்காக ஐயப்பா
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
~~~*~~~*~~~*~~~
0 comments:
Post a Comment