பாடியவர் - எம்.கே.தியாகராஜ பாகவதர்
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே – சங்கரி ஜகதம்பா
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
0 comments:
Post a Comment