Murugan Suprabhatham Lyrics Tamil
வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம் அழைத்திடுமே
கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின் புகழ் பாடுமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று செங்கதிர்வேலவனே சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே தேவசேனாபதியே சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ பாலகனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம் பக்தியோடு முழங்குகிறார் கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன் எழுந்தருவாய் சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை பாலகனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே கார்த்திகேயனே அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி ஆண்டவனே தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே குமரவேலே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய் அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய முதல்வனே முருகனே பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும் சென்னிமலையிலே வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய மாமலையே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே கார்த்திகேயனே முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம் பாதமே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே சண்முகனே வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி மணவாளனே புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை ஆண்டவனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன் மைந்தனே கருணையே வடிவமாய் காட்சி தந்திடும் சரவணபவனே அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும் மால்மருகனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே சென்னிமலை ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே சென்னிமலை த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே சென்னிமலை திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே சென்னிமலை ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு நிவேத்தியம் அதிகாலை சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும் சண்முகனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த சிங்காரவேலனே தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ் தினைமாவும் பக்தியுடன் அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம் பணிந்தோமே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா கோமளத்திருமுருகா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய சென்னிமலை முருகனே வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை மணந்த மணவாளனே வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும் கண் கண்ட தெய்வமே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு படிக்காசு தந்தான் மலையே சீர்வளரும் சென்னிமலை மேவிய செந்தமிழ்வாசா பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி வேலவா திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம் திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம் உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம் திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம் நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ உத்தரவு வழக்கம் திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
விசாகப்பெருமானின் அரும் விலாசம் சென்னிமலையே ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும் குகனே கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
0 comments:
Post a Comment