Vinayagar Tamil Song Lyrics
Singer - T.L.Maharajan
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
விநாயகா . . . விநாயகா . . .
விநாயகா . . . விநாயகா . . .
தென்மதுரை மாநகரில் மாபெரும் உருவமாய்
திகழ்ந்தருள் செய்பவனே சிறுவிழி அழகனே
முக்தி வழி தந்திட அமர்ந்தவனே எங்கள்
முக்குறுணி பிள்ளையே விக்ன விநாயகனே
மலைக்கோட்டை உச்சியில் மாதவ உருவாகி
மலை தவழும் முகிலாய் கருணை பொழிபவனே
அளவில்லா விளையாட்டு உடையவனே எங்கள்
ஆனந்தனே உச்சி பிள்ளையாரே பிள்ளையாரே
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
கற்பக மரமாகி கனிகின்ற கணபதி
கலைகளுக்கிருப்பிடமாய் திகழ்ந்திடும் பெரும்நிதி
மெல்ல அமர்ந்து வரம் துள்ளி அருள்பவனே
பிள்ளையார்பட்டியின் பேரருள் கற்பகமே
எது மெய் பொய்யென்று அறியார்க்கும் கூட
எல்லா கலைகளையும் வணங்கிடத் தருபவனே
புதுவை திகழ்கின்ற மதகரி நாயகனே
புகழே மணக்குலத்து அழகிய கணபதியே
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
அழகிய கணபதியே . . .
ஆற்றல் மிகக் கொண்ட அரச மரத்தோனே
விருத்தாச்சலம் அமர்ந்த வினை நீக்கும் நாயகனே
சுந்தரமூர்த்திக்கு சாட்சியாய் வந்தமர்ந்த
மாற்றுரைத்த எங்கள் பிள்ளையாரே
அம்மையப்பன் பெருமை உலகம் அறிந்திடவே
அடிமேல் அடிவைத்து அவர்களை வலம் வந்து
செம்மாங்கனிக் கொண்டு திருவலம் தளத்தினிலே
திகழ்பவனே எங்கள் வலம் வந்த கணபதியே
நலம் தந்த கணபதியே . . .
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
தலம் யாவும் உறைகின்ற தவப்பிள்ளையே
சிவசங்கரி கொண்டாடும் முதற்பிள்ளையே
நாயகா . . . விநாயகா . . .
நாயகா . . . விநாயகா . . .
~~~