Mayilerum Mannava - Murugan Song Lyrics Tamil
மயிலேறும் மன்னவா - என்
மனமேற இங்கு வா!
செயல் வீரன் அல்லவா - உன்
சிறப்பெல்லாம் சொல்லவா
மயிலேறும் மன்னவா - என்
மனமேற இங்கு வா!
செயல் வீரன் அல்லவா - உன்
சிறப்பெல்லாம் சொல்லவா
அறிவான அமுதம் நீ
அழகான குமுதம் நீ
அறிவான அமுதம் நீ - என்றும்
அழகான குமுதம் நீ
நெறியோடு நடப்பவரை
வாழ்த்துகின்ற தலைவன் நீ
மயிலேறும் மன்னவா - என்
மனமேற இங்கு வா!
செயல் வீரன் அல்லவா - உன்
சிறப்பெல்லாம் சொல்லவா
அகந்தையில்லா மனம் அமைத்தேன்
அன்பால் அரங்கமைத்தேன்
புகழ் மிகுந்த உன் வரவை
பொன் போல் நோக்குகின்றேன்
மயிலேறும் மன்னவா - என்
மனமேற இங்கு வா!
செயல் வீரன் அல்லவா - உன்
சிறப்பெல்லாம் சொல்லவா
நூறுமுகம் இருந்தாலும்
ஆறுமுகம் போல் வருமா
சீறிவரும் புயல்களையும்
சிரித்தே அடக்கிடுவாய்
சீறிவரும் புயல்களையும் - நீ
சிரித்தே அடக்கிடுவாய்
மயிலேறும் மன்னவா - என்
மனமேற இங்கு வா
செயல் வீரன் அல்லவா - உன்
சிறப்பெல்லாம் சொல்லவா.
~~~*~~~
0 comments:
Post a Comment