சரஸ்வதி தாயே தயை புரிவாயே
Saraswathi Thaye Tayai Purivaye
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
சரஸ்வதி தாயே தயை
புரிவாயே
சகலகலா வள்ளி ஆனவள் நீயே
வர மழை பொழிவாய் கலைமகளே
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்
ஒளிமழை
தாயே…
வாழ்வினில் விளக்கேற்றும்
ஒளிமழை தாயே…
ஜெய ஜெய தேவி நமோஸ்துதே
ஜெய ஸ்ரீ சரஸ்வதி
நமோஸ்துதே
ஜெய ஜெய வானி நமோஸ்துதே
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
மாதரசி வேனி நான்முகன் பத்தினி
மறைகளெல்லாம்
போற்றும் சரஸ்வதி தேவி
மாதரசி வேனி நான்முகன்
பத்தினி
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி
நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி
நாதமே
வடிவானாய் நான்முகன் நாயகி
நல்லருள்
புரிவாயே தாயி பாரதி
நல்லருள் புரிவாயே
தாயி பாரதி
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே
கல்விக்கே
ஆதாரம் விளங்கிடும் தாயே
கலைகளுக்கெல்லாம்
அதிபதி நீயே
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும்
தாயே
சிலைவடிவானதோர் சித்திரமே
நாளும்
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
வெள்ளை கலையுடன் வீணை மடியினில்
ஈட்டிடுவாயே நாதம்
நீ சொல்லாமல்
சொல்லிடும் ஒலியே
பூமிக்கு நான்மறை வேதம்
வெள்ளை கலையுடன் வீணை மடியினில்
ஈட்டிடுவாயே நாதம்
நீ சொல்லாமல்
சொல்லிடும் ஒலியே
பூமிக்கு நான்மறை வேதம்
நெல்லின் மணிகளை பரப்பி நாங்கள்
எழுதிடும்
இன் திருநாமம்
நின்றன் அருளால் வந்து
குவிந்திடும்
அம்மா ஆயிரம் கானம்
கலைகளின் அரசி வானியம்மா
கவிப்பேர்
பருகும் தேனியம்மா
இலைபோல் தாமரை
அமர்ந்தாயே
சித்திர வீணையை சுமந்தாயே
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
சகலகலா வள்ளி
ஆனவள் நீயே
வர மழை பொழிவாய் கலைமகளே
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்
ஒளிமழை
தாயே…
ஜெய ஜெய தேவி நமோஸ்துதே
ஜெய ஸ்ரீ சரஸ்வதி
நமோஸ்துதே
ஜெய ஜெய வானி நமோஸ்துதே
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே
சரஸ்வதி தேவி சரணமம்மா
கவி மழையாய் நீ
வரணுமம்மா
கலைமகள் அலைமகள் துணையுடனே
மாதரசி அருள் சரணம்மா