ஆயிரம் இதழ் கொண்ட பாடல் வரிகள் - Aayiram Ithal Konda Lyrics in Tamil


ஆயிரம் இதழ் கொண்ட பாடல் வரிகள்
 Aayiram Ithal Konda Lyrics  in Tamil

Singer- P.Susheela


ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி
ஆலயம் வாழ்வு தரும்

ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி
ஆலயம் வாழ்வு தரும்

மங்கைய ரெலலாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்

அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்
ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்

ஆனி மறைந்து ஆடி
பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள்
மழையாலே மண்குளிரும்

ஆனி மறைந்து ஆடி
பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள்
மழையாலே மண்குளிரும்

முன்னை வினைகளை
ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
முன்னை வினைகளை
ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில்
சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு

ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி
ஆலயம் வாழ்வு தரும்

மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்

ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்

நதியாய்ப் பாயும்
பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி
நறுமலராலே அலங்காரம்

நதியாய்ப் பாயும்
பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி
நறுமலராலே அலங்காரம்

தங்க ரதத்தில் அம்மன்
அமர்ந்து ஊர்கோலம்
தங்க ரதத்தில் அம்மன்
அமர்ந்து ஊர்கோலம்

அவள் தரிசனம் கண்டு
துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்

ஆயிரம் இதழ் கொண்ட
தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி
ஆலயம் வாழ்வு தரும்

மங்கைய ரெல்லாம் போற்றி
வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக்
கொடுக்கும் கலியுக தெய்வம்

கலியுக தெய்வம்
கருமாரி கலியுக தெய்வம்
கலியுக தெய்வம்
கருமாரி கலியுக தெய்வம்

~~~*~~~

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.