Sri Varalakshmi Viratham Song
நாராயணி லக்ஷ்மி நாராயணி
Singer - Nithyasree Mahadevan
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
காருண்யமான தேவி முகம்
கலசத்தில் வைத்து வழிபடுவோம்
பாற்கடல் நாயகி பார்வைபடும்
பணிவோம் பொன்பொருள் தேடிவரும்
பூரண விரதமே பேரின்பம்
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
மாதம் ஆவணி தோதான வெள்ளியில்
மனையைக்கூட்டி மணிவிளக்கேற்றி
மாலைத்தோரணம் ஏராளம் அமைத்து
மங்களகரமாய் மாக்கோலம் இழைத்து
வரலக்ஷ்மி தேவியே வாவெனப்பாடு
திருமகளே வந்து அமர்வாளே
வாழை இலைபோட்டு தீர்த்த அரிசிமேல்
பூர்ண கலசத்தை ஏற்று
காசு கருகமணி மாலை மணிதேங்காய்
பூவோடும் பொட்டோடும் பொன்னான நாள்
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
ராஜ தேவிக்கு ஸ்ரீ ஸ்வர்ண கௌரிக்கு
ஒன்பது நூலில் ஒன்பது முடிச்சுடன்
பூஜை நேரத்தில் சரடாக திரித்து
ஒன்பது பேருக்கு பூவோடு கொடுத்து
கைகளைக் கூட்டி கனிவோடு வணங்கு
இனி என்றென்றும் சுபயோகம் தான்
மாலை மரியாதை பேறு பதினாறு
தீர்க்க மாங்கல்யத்தோடு
ஆலமரமாக வாழையடி வாழை
பிள்ளைகள் பேரன்கள் ஒன்றாகத்தான்
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
காருண்யமான தேவி முகம்
கலசத்தில் வைத்து வழிபடுவோம்
பாற்கடல் நாயகி பார்வைபடும்
பணிவோம் பொன்பொருள் தேடிவரும்
பூரண விரதமே பேரின்பம்
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி லக்ஷ்மி நாராயணி
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
தீர்க்க சுமங்கலி வீட்டுக்கு வருவாள்
Blogger Comment
Facebook Comment