வருக வருக வருக வருக வடிவுடையம்மா – வரம்
தருக தருக தருக தருக வடிவுடையம்மா
ஈஸ்வரன் இதயத்தின் எழிலோவியமே
அழகைச்சொட்டும் அருளைச்சொட்டும் அருளோவியமே
மாலைக்கண் மயக்குகினற மணக்கும் ரோஜா நீ
மகிழ்ச்சி பொங்க அனைவரையும் வாழ வைப்பாயே (வருக வருக)
சொத்து சுகம் தருபவளே சொர்ணாம்பிகே
சொக்காநாதன் தனைக் கவர்ந்த சொர்ணாம்பிகே
சோலைதனில் தவழ்ந்து வரும் இளந்தென்றல் நீ
சோராத சொந்தம் என்னை காப்பாய்நீயே (வருக வருக)
ஊமை ஊனம் குருடு செவிடு எல்லா நோயுமே
உன்நாமம் உறைப்பதினால் ஓடிப்போகுமே
அன்னை சக்தி உலக்தை காத்துநிற்கிறாய்
அல்லும் பகலும் உன்நினைவால் வாழ வேண்டுமே (வருக வருக)
ஐமுகனாம் முக்கண்ணன் ஈசனிடம்நீ
அடங்கி விட்ட அழகென்ன அர்தனாரியே
ஐங்கரனை ஆறுமுகனை அழைத்தனால் நல்ல
ஆயிரமாம் கோடிமக்கள் எம்மையும் பாரு (வருக வருக)
தடையின்றி வரம் தருவாய் தவம் புரிந்தோற்கு
கவிபாடி நிற்கின்றேன் காட்சி அருள்வாய்
ஓம்கார சக்தியே உன் ஓரவிழியினால்
ஒருமுறை பார்க்கநான் சரண் புகுந்தேனே (வருக வருக)
0 comments:
Post a Comment