No Audio
விக்ன ராஜனே விநாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே!
ஆனை முகனே ஆதி மூலமே
அணைத்திட ஓடிவா ஆறுமுகன் சோதரனே!
அகந்தை அழிக்கும் அகரமுதலோனே
ஆனந்த உருவே கலியுக நாதனே!
அருள் சுரக்கும் தேவாதி தேவனே
அறிவுச் சுடரே அறுகினில் மகிழ்பவனே!
முக்தி தருவாய் மூஞ்சூறு வாகனனே
மூலாதாரச் சுடரே முக்காலம் அறிந்தோனே!
விந்தை மகனே விநாயக மூர்த்தியே
வெற்றி அளிப்பாய் விக்ன விநாயகனே!
Blogger Comment
Facebook Comment