கண்ணன் எங்கள் கண்ணனாம் பாடல் வரிகள்


கண்ணன் எங்கள் கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|

வெண்ணெய் உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம் |2|

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|


குழலினாலே மாடுகள் 
கூடச்செய்த கண்ணனாம் |2|

கூட்டமாகக் கோபியர்
கூடஆடும் கண்ணனாம் |2|

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|


மழைக்கு நல்ல குடையென 
மலைபிடித்த கண்ணனாம் |2|

நச்சுப் பாம்பு மீதிலே 
நடனமாடும் கண்ணனாம் |2|

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|


கொடுமை மிக்க கம்சனைக் 
கொன்று வென்ற கண்ணனாம் |2|

தூதுசென்று பாண்டவர் துயரம் 
தீர்த்த கண்ணனாம் |2|

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|


அர்ஜூனர்க்கு கீதையை
 அருளிச் செய்த கண்ணனாம் |2|

நல்லவர்க்கு அருளுவான்
 நாங்கள் போற்றும் கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம் |2|

கார்மேக வண்ணனாம் |2|


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Murugan Song Lyrics

Shiva Devotional Songs Lyrics

.

Rama Devotional Songs Lyrics

.