பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி, விஜயா எம்.அர்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி பழநி மலையாண்டி பழநி மலையாண்டி
0 comments:
Post a Comment