கலியுக வரதன் - Kaliyuga Varadan Lyrics in Tamil


Palani-Murugan

Singer - Bombay S. Jayashree

ராகம்: பிருந்தாவன சாரங்க 

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்

காட்சியளிப்பது பழனியிலே |3|மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் (x3)
மரகத வண்ணனாம் திருமால் மருகன்

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்


கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே


கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்

கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார் |2|விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார் (x3)
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்


விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே |2|Share on Google Plus

About Kantharaj Kabali