ஆறுபடை முருகன் அழகு - பாடல் வரிகள் - Aarupadai Murugan Azhagu Lyrics

 


ஆறுபடை முருகன் அழகு - பாடல் வரிகள்

Aarupadai Murugan Azhagu Lyricsஅழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு

பழநியிலே நிற்கின்ற நம்முருகன் அழகு
பழநியிலே நிற்கின்ற நம்முருகன் அழகு - அவன்
பிடித்திருக்கும் தண்டத்தின் பெருமையும் அழகு
ராஜ வேடம் காண்பதில்தான் எத்தனை அழகு
ராஜ வேடம் காண்பதில்தான் எத்தனை அழகு - நம்மை
ராஜாவாக்கும் அவன் கருணை அதைவிட அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


உபதேசம் உரைக்கின்ற சுவாமியும் அழகு
உபதேசம் உரைக்கின்ற சுவாமியும் அழகு - அவன்
சிவன் மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பும் அழகு
மௌன மொழி மந்திரத்தின் பெருமையும் அழகு
மௌன மொழி மந்திரத்தின் பெருமையும் அழகு
அதை உணர்ந்தால் நாம் அடையும் நிலையும் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


மாயை அழித்த மன்னவனின் கோலம் அழகு
மாயை அழித்த மன்னவனின் கோலம் அழகு - அவன்
பூஜை செய்யும் விதம் என்றும் காண்பதற்கழகு
செந்தூரின் கடற்கரையும் கோவிலும் அழகு
செந்தூரின் கடற்கரையும் கோவிலும் அழகு - அவன்
கமல மலர் தாழ்வருடும் அலைகளும் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


குன்றம் அமர் குகனோ நல்ல மாப்பிள்ளை அழகு
குன்றம் அமர் குகனோ நல்ல மாப்பிள்ளை அழகு - அவனை
சூழ்ந்திருக்கும் தேவர்கள் மனநிறைவும் அழகு
தெய்வயானை திருமணமோ நித்திய அழகு
தெய்வயானை திருமணமோ நித்திய அழகு - அதை
காணுகின்ற நம் கண்கள் என்றென்றும் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


தணிகையிலே நிற்கின்ற குமரன் அழகு
தணிகையிலே நிற்கின்ற குமரன் அழகு
அவன் கொண்ட சாந்தமோ அகிலத்தில் அழகு
திருப்படியின் உற்சவமோ முதல் நாள் அழகு
திருப்படியின் உற்சவமோ முதல் நாள் அழகு - அதில்
அவன் உணர்த்தும் நம் வாழ்வின் ஏற்றம் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


மாமன் வீட்டில் அவனிருக்கும் அழகோ அழகு
மாமன் வீட்டில் அவனிருக்கும் அழகோ அழகு
அதைக் காணும் பக்தர்களின் ஆனந்தம் அழகு
சோலைமலைக் காட்சிகளோ இயற்கையின் அழகு
சோலைமலைக் காட்சிகளோ இயற்கையின் அழகு - அங்கு
சோர்வகற்றி பொலிவுதரும் கிழவோன் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு


ஆறுபடை வீடுகளோ நாட்டில் அழகு
ஆறுபடை வீடுகளோ நாட்டில் அழகு - அதில்
அவன் நடத்தும் ஆட்சியுமே தருமத்தின் அழகு
முருகன் இருக்கும் இடமெல்லாம் இளமையின் அழகு
முருகன் இருக்கும் இடமெல்லாம் இளமையின் அழகு - அவன்
வீற்றிருக்கும் நம் மனமோ விந்தையின் அழகு

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.