ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள் - Aduga Nadanam Aadugave Lyrics

 


ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள் 
Aduga Nadanam Adugave Song Lyrics
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

சிவகை லாசா பரமேசா 
திரிபுரம் எறித்த நடராசா
பவபயம் போக்கும் பரமேசா
பனிமலை ஆளும் சரவேசா

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

அறுகொடு தும்பை மலராட 
அணிமணி மாலைகள் தானாட
பெருகிடும் கங்கை தலையாட 
பிறைமதி யதுவும் உடனாட

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

சூலம் உடுக்கை சுழன்றாட
சூழலும் கணங்கள் உடனாட
ஆலம் குடித்தோன் ஆடுகவே
அடியார் மகிழ ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

ஆலாவா யரசே சொக்கேசா
அவனியைக் காக்கும் பரமேசா
ஆலங்காட்டில் ஆடிடுவாய்
அரஹர சிவனே ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

திருக்கட வூரின் கடயீசா
 தில்லையம் பதியில் நடராஜா
திருமுல்லை மாசில்லா மணியிசா 
திருநடனம் ஆடுக ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

மயிலைக் கபாலி ஈஸ்வரனே
மதுரையில் ஆடிய ஆட்டமென்ன
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன
கால் மாறி ஆடுக ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே 
அரஹர சிவனே ஆடுகவே

🌺🌺🌺🔱🔱🔱🌺🌺🌺

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.