Singer - Bangalore A.R.Ramani Ammal
ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் … கந்தன்
அருமையாய் அந்தரங்கத்திருக்கும் குகன்
கறுவிழி வள்ளிமானுக்குகந்த குகன் … கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் … கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் … கந்தன் திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
மனமது கனிந்திடில் மருவும் குகன் … கந்தன் கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகன் தனதென தான் பரிந்து பேசும் குகன் (2) … கந்தன் திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு … விளையாடு … கூத்தாடு மயிலே … விளையாடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
0 comments:
Post a Comment