வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்
தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும்
நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும்
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை
நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே
கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான்
அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே
இலகாத கல்நெஞ்சும் இலகும்படி செய்து
இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன்
மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய
நிறைவான அருளாசி புரிகின்றவன்
வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட
சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும்
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்
வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய
தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன்
திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு
சீரான செல்வங்கள் சேர்கின்றவன்
பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு
வழியெல்லாம் துணையாக வருகிறவன்
படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு
மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன்
குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி
அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்
தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும்
நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும்
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா
Blogger Comment
Facebook Comment