அண்ணாமலை என்னரசே பாடல்வரிகள் - Annamalai En Arase Lyrics

Arunachaleswarar

அண்ணாமலை என்னரசே...
உண்ணாமுலை பொன்னரசே...
தாயோடு நிற்பவரே...
தாய்பாதி ஆனவரே...

அருணாசல ஈஸ்வரனே...
ஆதி அந்தம் ஆனவனே...
வெண்பாவை மாணிக்கமே...
உன் ஜோதி, என் எதிரே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...


ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,
அண்ணாமலையார் பாதமே....
சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,
ஐயன் அருளின் கீதமே...

பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,
தஞ்சம் உனையே சேருமே..
பாதை எல்லாம், பரமன் நாமம்,
ஒலித்து ஒலித்து ஓதுமே...

அண்ணாமலை என்னரசே...
உண்ணாமுலை பொன்னரசே...
தாயோடு நிற்பவரே...
தாய்பாதி ஆனவரே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...


நமசிவாயமே, நாவும் பாடவே,
நாளும் நிறைவாய் ஆகுதே...
ஈங்கை மலர்களும், வில்வ இலைகளும்,
ஈசன் முகமாய் தோன்றுதே...
சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற,
அண்ணாமலையை பார்ப்பதே...
விந்தையின் வலிமை, என்று தானே,
வாழ்வின் திறனை ஏற்றுதே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...


கிருதா யுகத்தில், நெருப்புக் கோளமாய்,
ஆட்சி செய்த ஈசனே...
திரேதா யுகத்திலும், துவாபர யுகத்திலும்,
மாற்றம் பெற்றாய் உருவிலே...
அக்கினி லிங்கம், அழைக்கப்பெற்று
நீயும் கலந்தாய் உயிரிலே...
பார்க்கும் இடமெல்லாம், ஈசன் முகமே,
நமசிவாய வாழ்கவே....


அண்ணாமலை என்னரசே... (ஓம்..)
உண்ணாமுலை பொன்னரசே... (ஓம்..)
தாயோடு நிற்பவரே.. (ஓம்..)
தாய்பாதி ஆனவரே..(ஓம்..)

அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)

அண்ணாமலை என்னரசே... (ஓம் நமசிவாய)
உண்ணாமுலை பொன்னரசே... (ஓம் நமசிவாய)
தாயோடு நிற்பவரே... (ஓம் நமசிவாய)
தாய்பாதி ஆனவரே... (ஓம் நமசிவாய)

அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)
About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.