மார்கழி மூலத்தில் அவதரித்தவனே - Margazhi Moolathil Avatharithavane Lyrics in Tamil

Anjaneya Song

Anjaneya Song Lyrics

Singer - Unni Menon

வானர வீரனே வாயு புத்திரனே

ஸ்ரீ ஆஞ்சநேயனே

வல்லமைத் தரவே வந்தனை செய்தோம்

ஸ்ரீராம தூதனே


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

நினைத்த உடனே கணத்தில் வருவாய்

ஸ்ரீ ஜெய மாருதியே


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

நினைத்த உடனே கணத்தில் வருவாய்

ஸ்ரீ ஜெய மாருதியே


சிரஞ்சீவியான சீலனே சூரனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

அடியவர் வேண்டும் வரங்களைத் தருவாய்

ஸ்ரீ ஜெய மாருதியே

ஸ்ரீ ஜெய மாருதியே...


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

ஹனுமன் மனதில் சீதாராம்

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

போரூர் செல்வனே ஸ்ரீஹனுமான்


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

ஸ்ரீ சிவ ஹனுமானே...


கடலைக் கடந்து தடைகளைத் தகர்த்து

அன்னையைக் கண்டவனே

ராமனின் துணையாய்த் தூதனாய் சென்றே

அரக்கரை மாய்த்தவனே


கடலைக் கடந்து தடைகளைத் தகர்த்து

அன்னையைக் கண்டவனே

ராமனின் துணையாய்த் தூதனாய் சென்றே

அரக்கரை மாய்த்தவனே


அசோகவனத்தினில் புகுந்த இறைவனே

வல்லமை உடையோனே

அசோகவனத்தினில் புகுந்த இறைவனே

வல்லமை உடையோனே


தீயோர் மாயவே தீயையும் வைத்த

தீரனே ஹனுமானே

தீரனே ஹனுமானே...


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

ஹனுமன் மனதில் சீதாராம்

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

போரூர் செல்வனே ஸ்ரீஹனுமான்


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

ஸ்ரீ சிவ ஹனுமானே...


ராமநாமத்தில் மகிழ்பவா குளிர்பவா

உன்னை சரணடைந்தேன்

துளசிமாலை சாற்றினோம் வாழ்வை

துலங்கிட செய்திடுவாய்


ராமநாமத்தில் மகிழ்பவா குளிர்பவா

உன்னை சரணடைந்தேன்

துளசிமாலை சாற்றினோம் வாழ்வை

துலங்கிட செய்திடுவாய்


வெற்றிலை வெண்ணெய் சாற்றினோம் உமக்கு

வெற்றிகள் அருளிடுவாய்

வெற்றிலை வெண்ணெய் சாற்றினோம் உமக்கு

வெற்றிகள் அருளிடுவாய்


வடையில் மாலை தடைகளைத் தகர்க்கும்

வாழ்விலே வளம்சேர்க்கும்

வாழ்விலே வளம்சேர்க்கும்


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

ஹனுமன் மனதில் சீதாராம்

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

போரூர் செல்வனே ஸ்ரீஹனுமான்


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

நினைத்த உடனே கணத்தில் வருவாய்

ஸ்ரீ ஜெய மாருதியே


சிரஞ்சீவியான சீலனே சூரனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

அடியவர் வேண்டும் வரங்களைத் தருவாய்

ஸ்ரீ ஜெய மாருதியே

ஸ்ரீ ஜெய மாருதியே...


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

ஹனுமன் மனதில் சீதாராம்

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்

போரூர் செல்வனே ஸ்ரீஹனுமான்


மார்கழி மூலத்தில் அவதரித்தவனே

ஸ்ரீ சிவ ஹனுமானே

ஸ்ரீ சிவ ஹனுமானே

~~~

Jai Sri Hanuman


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.