ஒன்பது கோளும் ஒன்றாய் காண - Onbathu Kolum Ondrai Kaana Lyrics


Pillaiyarpatti-pillaiyar


Ganapathi Devotional Song Lyrics

ஒன்பது கோளும் ஒன்றாய் காண


அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்
அதுவே ஆனை முகம் எனும்
ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்
அவனை தொழுதால் போதும்
நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால்
நவகிரகங்களும் மகிழும்
நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்


அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்

பல வித குணங்களை கொண்டிருக்கும்

எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது

ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்


அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்


சூரிய பகவான் ஒளி முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

கதிரவன் தரிசனம் பெற வேண்டும்


சூரிய பகவான் ஒளி முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்

கதிரவன் தரிசனம் பெற வேண்டும்


இருளை விலக்கி உலகை எழுப்பும்

ஞாயிறு அங்கே குடியிருப்பான்

அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில் 

ஒளியாய் வந்து குடியிருப்பான்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்


திங்கள் பகவான் திரு முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

குளிரும் அவனை தொழ வேண்டும்திங்கள் பகவான் திரு முகம் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்

குளிரும் அவனை தொழ வேண்டும்பார்கடல் பிறந்த சந்திர பகவான்

கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்

எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு

தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்


அங்காரகனவன் தங்கும் இடமே

கணபதியாரின் வலத் தொடையே

அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

வணங்கிட வேண்டும் கணபதியைஅங்காரகனவன் தங்கும் இடமே

கணபதியாரின் வலத் தொடையே

அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்

வணங்கிட வேண்டும் கணபதியைநெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்

மழையாய் மாறி பொழிந்திடுவான்

அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்

மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்புத பகவானின் பத மலர் இரண்டும்

பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

புதனவன் தரிசனம் கிடைக்கிறதேபுத பகவானின் பத மலர் இரண்டும்

பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே

எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே

புதனவன் தரிசனம் கிடைக்கிறதேஞான தேவியின் கணவன் புதனாம்

ஞானம் நமக்கு கைக் கூடும்

எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண

வாக்கு வன்மையும் கை சேரும்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்

குடி வந்த குருவை தொழ வேண்டும்குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்

குடி வந்த குருவை தொழ வேண்டும்ஆலமர் செல்வன் அவனது பார்வை

தடைகளை நீக்கி வளம் பெருக்கும்

நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்

மாங்கல்ய பலமே திடமாகும்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே

இருக்கும் அவனை தொழ வேண்டும்சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே

இருக்கும் அவனை தொழ வேண்டும்புத்திர பாக்கியம் தருகிற பகவான்

சுக்கிரன் அங்கே குடியிருப்பான்

அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு

பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே

வாழும் அவனை தொழ வேண்டும்அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே

வாழும் அவனை தொழ வேண்டும்வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்

சனி பகவானின் செயலல்லவா

அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு

சனியின் பார்வை நலமல்லவா


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

பிள்ளையர் பட்டி வரலாமே

எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

இருக்கும் ராகுவை தொழலாமேதிருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

பிள்ளையர் பட்டி வரலாமே

எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

இருக்கும் ராகுவை தொழலாமேபிணிகளை தருகிற பகவான் அவனே

மருத்துவம் செய்வான் தெரியாதா

ராகுவின் பதத்தை கணபதி கை மேல்

கண்டால் நன்மைகள் விளையாதா


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே

மலரும் கேதுவை தொழ வேண்டும்கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே

மலரும் கேதுவை தொழ வேண்டும்ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது

கணபதி தொடையில் கொலுவிருப்பான்

அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்

தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்


நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே


ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பிள்ளையர் பட்டி வர வேண்டும்அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

உறையும் அவரை தொழ வேண்டும்

~~~*~~~


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Durga Song Lyrics

Amman Devotional Songs Lyrics

.

Devi Devotional Songs Lyrics

.