முருகா முருகா முருகா
நீயல்லால் தெய்வமில்லை, எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா
நீயல்லால் தெய்வமில்லை, எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை
தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்,ஞான
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நெஞ்சே நீ வாழும் எல்லை
வாயாரப் பாடி, மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
வாயாரப் பாடி, மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா....
தூயா முருகா மாயோன் மருகா, உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம், உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்
நீயல்லால் தெய்வமில்லை, எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா.... முருகா...... முருகா.....
0 comments:
Post a Comment