சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்




Singer - T M Soundararajan


சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்-தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடி வரும் ஐயப்பனை -நாமும்
கும்பிட்டுப் பாடுகிறோம் என்னப்பனை

சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்-தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடி வரும் ஐயப்பனை -நாமும்
கும்பிட்டுப் பாடுகிறோம் என்னப்பனை
சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்


பாலெனச் சொல்லுவது உடலாகும்-அதில்
தயிரெனக் கொண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டது உந்தன் அருளாகும்-இந்த 
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா-இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா (X2)
சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்

வாசம் உடைய பன்னீர் அபிஷேகம் -எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்
இனிய பஞ்சாம்ருததில் அபிஷேகம்- அதில் 
இன்பத்தை கூட்டுதையா உன் தேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா-இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா (X2)
சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்


உள்ளத்தின் வெண்மை தன்னை கையில் எடுத்து – அதில்
உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு
உருகும் விபூதியனால் அபிஷேகம் – ஹரி
ஓம்என்று  சந்தனத்தில்  அபிஷேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா-இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா (X2)
சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்

சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்-தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடி வரும் ஐயப்பனை -நாமும்

கும்பிட்டுப் பாடுகிறோம் என்னப்பனை
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா (X3)


About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Ganapathi Devotional Songs Lyrics

.

Vinayagar Devotional Songs Lyrics

.