கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்


kannan-devotional-song


Singer - Nithyasree Mahadevan

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்


கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்நாங்கள் 
காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள் 
காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம் 
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம் - என்னும் 
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்

  
சொன்ன மொழிதவறு  மன்னவனுக்கே -எங்கும்
தோழமை இல்லையடி  தங்கமே தங்கம்
சொன்ன மொழிதவறு  மன்னவனுக்கே -எங்கும்
தோழமை இல்லையடி  தங்கமே தங்கம்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்? 
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?--அவை 
யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ
யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ 
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்               


மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை 
மறைந்து திரிபவர்க்கு மானமுமுண்டோ?
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் தலை 
மறைந்து திரிபவர்க்கு மானமுமுண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றேகிழப்    
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்        
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம் 
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்               


ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்  
தங்கமே தங்கம்   
தங்கமே தங்கம்   

    Share on Google Plus

About Kantharaj Kabali